அமைச்சர் பதவியில் இருந்து விலகிய காங்கிரஸ் தலைவர்!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2019 12:39 pm
congress-leader-navjot-singh-sidhu-tweets-copy-of-his-resignation-letter

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அமைச்சரவையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து அமைச்சராக இருக்கிறார். 

சமீபத்தில் அவர் 'உள்ளாட்சி அமைப்புகள்' பொறுப்பில் இருந்து மின்சாரத்துறைக்கு மாற்றப்பட்டார். அமைச்சர் பதவிக்கான துறை மாற்றப்பட்டு ஓவர் மாதமாகியும் அவர் புதிய அமைச்சர் பதவியை ஏற்கவில்லை.

இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த ஜூன் 10ம் தேதி அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.   

 

முன்னதாக இதுகுறித்து பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறும்போது, உள்ளாட்சித்துறையில் செய்யப்பட்ட பணிகள் திருப்தி அளிக்கவில்லை என்றும் அதனால் தான் சித்துவுக்கு வேறு துறை ஒதுக்கியதாகவும் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close