டெல்லி: 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ!

  அனிதா   | Last Modified : 15 Jul, 2019 10:32 am
nia-arrests-14-people-in-delhi

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, நேற்றைய தினம் சென்னை, நாகை உள்ளிட்ட நான்கு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில், ஹசன் அலி, ஆரிஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேரை தேசிய முகமை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அவர்களை  விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close