மழை, வெள்ளத்துக்கு 11 பேர் பலி; 26 லட்சம் பேர் பாதிப்பு

  Newstm Desk   | Last Modified : 15 Jul, 2019 08:24 pm
rain-brings-brahmaputra-to-the-streets-of-assam-around-11-dead-and-2-6-million-affected

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டோடு வெள்ளத்தால் பார்பிட்டா, மோரிகயான், துர்பை, ஜோர்ஹட் ஆகிய மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டங்களுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தங்குவதற்காக, 62 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 11 பேர் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close