கர்நாடகா: காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ கைது!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 11:31 am
congress-mla-arrested-by-police

கர்நாடகாவில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடும்படி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் விசாரணையில் இருந்து வருகிறது. 

இதற்கிடையே, ஆட்சியை தக்க வைக்கும் பொருட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி, வருகிற 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ  ரோசன்பெய்க்-கை கர்நாடக போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெங்களூரு விமான நிலையத்தில் மும்பை செல்லவிருந்த போது, விமான நிலையத்தில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close