நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை: மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 04:22 pm
central-govt-replied-on-neet-exam

நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நேற்று நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் நீட் தேர்வில் இருந்து  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு விலக்கு கோரி திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். 

அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்ததாவது: 

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் விலக்கு கேட்டு கோரிக்கை வைத்திருந்தன. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ல் 10டி பிரிவானது மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்த பரிந்துரைக்கிறது. இது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துகிறது. எனவே குறிப்பிட்டு சில மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு அளிப்பது என்பது சாத்தியமாகாது. 

அதுபோன்று நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுத்துபூர்வமாக பதில் தெரிவித்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close