பார்லிமென்ட்டுக்கு ஒழுங்கா வரணும்... பாஜக எம்.பி.க்களை எச்சரித்த பிரதமர்!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 05:21 pm
prime-minister-narendra-modi-pulls-up-bjp-mps-over-attendance-in-parliament

பாஜகவின் எம்.பி.க்கள் குழு கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டட அரங்கில் இன்று காலை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, "நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் எம்.பி.க்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டியது அவர்களின் தலையாய கடமை. இதற்காகவே, கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டிய நாட்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களிடம் முன்கூட்டியே அளிக்கப்படுகிறது. 

இருப்பினும், சில எம்.பி.க்கள் இப்பட்டியலை பின்பற்றாமல்,  நாடாளுமன்றத்துக்கு தங்கள் இஷ்டத்துக்கு வருவது வருத்தம் அளிக்கிறது. தவிர்க்க இயலாத காரணங்களால் நாடாளுமன்றத்துக்கு வர இயலவில்லையென்றால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட பாஜக எம்.பி.க்கள் என்னிடம் அன்றைய தினமே தகவல் தெரிவிக்க வேண்டும்.  நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் இதுதொடர்பாக எனக்கு அவ்வப்போது தகவல்  அளிக்க வேண்டும்.

 நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர,  தங்களது தொகுதிகளில் நிலவும் தண்ணீர் பிரச்னை உள்ளிட்டவற்றை தீர்க்கும் நடவடிக்கைகளில் பொதுமக்களுடன் இணைந்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும்" என்று மோடி வலியுறுத்தினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close