மும்பை கட்டட விபத்தில் பலி 5 ஆக உயர்வு; பிரதமர் மோடி இரங்கல்!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2019 05:29 pm
the-death-toll-in-the-mumbai-building-collapse-has-risen-to-5

மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை டோங்கிரி பகுதியில் 4 மாடி கட்டிடம் இன்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.  சுமார் 15 குடும்பங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதுவரை 12 பேர் மீட்கப்பட்ட நிலையில், அதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. 

மும்பை கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்கள் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close