அரசியலமைப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டேன்: கர்நாடக சபாநாயகர்

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2019 11:30 am
karnataka-speaker-on-sc-verdict

எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது அரசியலமைப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக எம்.எல்.ஏக்கள் 15 பேர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. 

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளும்படி சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் அதேபோன்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் கூறும்போது, "எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது அரசியலமைப்புக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டேன். அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் லோக்பால் சட்டவிதிகளுக்குட்பட்டு தான் முடிவு எடுப்பேன்" என்று கூறியுள்ளார்.

newstm.in

எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கே முழு அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close