நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம்: அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2019 12:42 pm
we-won-t-participate-in-trust-vote-rebel-mlas

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம் என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர். 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவை பதவியேற்றது முதலே பல்வேறு பிரச்னைகள் சந்தித்து வரும் நிலையில், ஆளும் குமாரசாமி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  

இது தொடர்பாக கர்நாடக எம்.எல்.ஏக்கள் 15 பேர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில்,  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.  எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளும்படி சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது; அதேபோன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி  எம்.எல்.ஏக்கள்  கலந்துகொள்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் பங்கேற்க போவதில்லை என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

மும்பை ரிசார்ட்டில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம். நாங்கள் எங்களது முடிவில் தெளிவாக இருக்கிறோம். முடிவில் எந்த மாற்றமும் இல்லை. குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க எங்களுக்கு விருப்பமில்லை" என்று கூறியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close