அமர்நாத் பனிலிங்க தரிசனம்: எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது!

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2019 03:51 pm
over-2-lakh-pilgrims-undertake-amarnath-yatra-in-july-breaks-record

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனிலிங்கத்தை இந்த மாதத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகைக்கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான யாத்திரை கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது என்றும் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டிலும் நாள் ஒன்றுக்கு அதிகமான பக்தர்கள் வருவதாகவும் தகவல் தெரியவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 16 நாட்களில் மட்டும் 2,05,083 பக்தர்கள் வந்து பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாகவும், இன்று காலை 4,584 பக்தர்கள் ஜம்முவில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியுடன் அமர்நாத் யாத்திரை முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close