குல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் : பிரதமர் உறுதி

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2019 09:08 pm
truth-and-justice-have-prevailed-pm-modi-on-kulbhushan-jadhav-world-court-verdict

நம் நாட்டின் முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவுக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை நிறுத்தி வைத்து சர்வதேச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

உண்மையும், நீதியும் வென்றுள்ளது என இந்த உத்தரவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை இந்தியா வரவேற்பதாகவும், வழக்கை தீவிர விசாரித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இனிவரும் காலத்திலும் இவ்வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தான் உறுதியாக நம்புவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close