நம்பிக்கை வாக்கெடுப்பு: எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2019 12:37 pm
trust-vote-debate-is-going-in-karnataka-assembly

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டதால் சபாநாயகர் எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்துளளார். 

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், முதலமைச்சர் மீது அதிருப்தி ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.  இதில், காங்கிரஸ் கட்சி  எம்.எல்.ஏக்கள் 13 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் அடங்குவர்.

இதையடுத்து, முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. தீர்மானத்தின் மீது முதலமைச்சர் குமாரசாமி உரையாற்றினார். 

அப்போது முதலமைச்சர் குமாரசாமி பேசும்போது, பாஜக எம்.எல்.ஏக்கள் கோஷமிட்டனர். பின்னர் இரு தரப்பு எம்.எல்.ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சபாநாயகர் எம்.எல்.ஏக்களை எச்சரித்தார். அவையின் விதிமுறைகளை மீறி யாரும் நடந்துகொள்ளக்கூடாது என்றும் அனைவருக்குமே அவையில் பேசுவதற்கு நேரம் தரப்படும் என்றும் கூறினார். 

இதையடுத்து, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close