பெங்களூரு நகைக்கடை மோசடி: ஐ.எம்.ஏ நிறுவனர் மன்சூர் கான் கைது!

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2019 10:04 am
ima-ponzi-scam-accused-mansoor-khan-arrested-by-ed-in-delhi

பெங்களூரு ஐ.எம்.ஏ நகைக்கடை மூலமாக மோசடியில் ஈடுபட்ட அதன் உரிமையாளர் மன்சூர் கான் இன்று டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள தனது ஐ.எம்.ஏ நகைக்கடை மூலமாக பல்வேறு முதலீட்டாளர்களிடையே மோசடி செய்ததாக மன்சூர் கான் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடிய சூழ்நிலையில், மன்சூர் கான் தலைமறைவானார். 

இதையடுத்து, அவர் துபாயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் நாடு திரும்ப வேண்டும்; இல்லையென்றால் துபாய் வந்து கைது செய்வோம் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், முதலில் வரமறுத்த மன்சூர் கான், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று துபாயில் இருந்து டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் வைத்தே மன்சூர் கானை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் மன்சூர் கானிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே, கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகள் பலர் தன்னிடம் நகைகளை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும், அதனால் தான் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும் முன்னதாக அதிகாரிகளிடம் மன்சூர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close