இரவு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 12:01 pm
i-won-t-leave-says-priyanka-gandhi-spends-night-in-up-s-mirzapur

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது கட்சியினருடன் நேற்று இரவு முழுவதும் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டார். 

கடந்த 17ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க நேற்று அப்பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரை கைது செய்து பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதிவரை பிரியங்காவை சோன்பத்ராவுக்கு செல்ல போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார். சோன்பத்ராவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் தான் திரும்ப மாட்டேன் என்று கூறி அங்கேயே இரவு முழுவதும் போராட்டம் நடத்தினார். 

பின்னர் நள்ளிரவு 1.15 மணிக்கு தான் பிரியங்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார். இரவு அதிகாரிகள் தன்னுடன் பேசிய வீடியோவை பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close