டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 08:12 pm
former-delhi-chief-minister-congress-leader-sheiladikshit-passes-away-in-delhi-at-the-age-of-81-years

டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 81. 

இன்று காலை வழக்கமான உடல் பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1998ம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியில் முதல்வராக இருந்து டெல்லியை நீண்ட நாட்களாக ஆட்சி செய்த முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.  

ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய இணையமைச்சராக பதவி வகித்தவர். கேரள மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். 

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜகவின் மனோஜ் திவாரி, தேர்தலில் வெற்றி பெற்றதும்  ஷீலா தீக்ஷித்தை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. 

தற்போது டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக அவர் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஷீலா தீட்ஷித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close