பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2019 09:22 pm
dogs-rescue-newborn-from-drain-in-haryana-s-kaithal

ஹரியானா மாநிலம், கைதாள் மாவட்டத்துக்குட்பட்ட டாக்ரா கேட் பகுதியில் இன்று காலை, கழிவுநீர் கால்வாய்க்குள் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்த இரண்டு தெரு நாய்கள் குழந்தையின் கூக்குரலை கேட்டு, அதன் அருகில் சென்று குரைக்க தொடங்கியுள்ளன. அத்துடன், வாயினால் கவ்வி அக்குழந்தையை வெளியே எடுத்துள்ளன.

இதனை கவனித்த பொதுமக்கள், உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த போலீஸார், பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை போலீஸார் ஆராய்ந்தபோது, அக்குழந்தையின் தாயே, அதனை பாலிதீன் பையில் கட்டி, கழிவுநீர் கால்வாயில் தூக்கி வீசி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close