புனேவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதல்; மாணவர்கள் 9 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 11:33 am
pune-nine-friends-die-as-suv-jumps-divider-hits-truck

புனே தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் பலியாகினர்.

புனேவில் இருந்து சோலாப்பூர் சென்ற கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த லாரி மீது மோதியது. இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்த 9 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேருமே 19 வயது  முதல் 22 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close