சந்திரயான் 2 நாளை விண்ணில் பாயும் - இஸ்ரோ தலைவர் சிவன்

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 12:54 pm
chandrayaan-2-will-launch-tomorrow-isro-chief-sivan

சந்திரயான் 2 நாளை விண்ணில் பாயும் என்றும் இனிமேல் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படாது என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

இன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோவின் தலைவர் சிவன், "சந்திரயான் 2 எப்போது விண்ணில் ஏவப்படும் என்று உலக அளவில் அறிவியலாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டபடி சந்திரயான் 2 நாளை(ஜூலை 22) விண்ணில் ஏவப்படும். 

இனிமேல் சந்திரயான் 2 விண்கலத்தில் எந்தவித தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படாது. சந்திரயான் 2 பாதுகாப்பாக, வெற்றிகரமாக விண்ணில் ஏவும் பட்சத்தில் உலக அளவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனித்துவமான பெருமையை பெறும்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close