இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா தேர்வு!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 02:18 pm
d-raja-to-replace-sudhakar-reddy-as-cpi-general-secretary

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழக எம்.பி டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக கட்சியின் பொதுச் செயலராக இருந்த எஸ்.சுதாகர் ரெட்டி உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழுவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் டி.ராஜா, கட்சியின் அடுத்த பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பியாக உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close