காங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீக்ஷித்தின் உடல்; சோனியா, பிரியங்கா மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 21 Jul, 2019 03:22 pm
sonia-priyanka-gandhi-pay-tributes-to-sheila-dikshit-last-rites-today

டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித்தின் உடல் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று வைக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர். 

பின்னர் அவரது உடல் நிகாம் போத் காட்(Nigam Bodh Ghat)-இல் உள்ள யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்பட்டது. 

டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 81. அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1998ம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியில் முதல்வராக இருந்து டெல்லியை நீண்ட நாட்களாக ஆட்சி செய்த முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய இணையமைச்சராக பதவி வகித்தவர். கேரள மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். 

newsmtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close