நம்பிக்கை வாக்கெடுப்பை 2 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்: முதல்வர் கோரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2019 12:42 pm
karnataka-assembly-meeting-highlights

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை வருகிற 24ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் 2 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. 

கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று 3வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று சபாநாயகரிடம் முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். வருகிற 24ம் தேதிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று கோரியுள்ளார். 

முன்னதாக, இன்று(ஜூலை 22) மாலை 6 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முயற்சி மேற்கொள்வேன் என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close