ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை தொடர்ந்து ஆய்வு செய்ய சிறப்புக்குழு: மதுரைக்கிளை உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 22 Jul, 2019 01:17 pm
madurai-court-gives-directions-to-school-education-department

ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சௌபாக்கியவாதி என்ற ஆசிரியை தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 

விசாரணை முடிவில் நீதிபதி பேசும்போது, "அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக வகுப்பிற்கு வந்து பாடம் நடத்துவதில்லை என தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

எனவே, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதனை செய்து அது திருப்தி அளிக்காத பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதற்காக  முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close