முன்னாள் முதல்வரின் மகனுக்கா இந்த நிலைமை!

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2019 05:37 pm
ex-cm-s-son-dressed-as-lord-shiva-and-offered-prayer

பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், சிவன் வேடமணிந்து, பாட்னாவில் உள்ள ஒரு கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரின் இந்த கோலத்தை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். 

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மூத்த தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். அந்த கட்சியின் கூட்டணி மாநிலத்தில் ஆட்சி செய்த போது, மாநில அமைச்சராக இருந்த இவர், தற்போது மந்திரி பதவி இல்லாததால், கடும் விரக்தியில் காணப்படுகிறார். 

இந்நிலையில் பாட்னாவில் உள்ள பிரபல கோவிலுக்கு சென்ற அவர், சிவன் போலவே வேடமணிந்து சுவாமி தரிசனம் செய்தார். அவரின் இந்த செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. மக்கள் அவரை, வியப்புடன் பார்த்துச் சென்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close