நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7 வரை நீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 25 Jul, 2019 07:33 pm
parliament-mansoon-session-extended-till-august-7

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அறிவித்தார்.

அவையில் இன்னும் 17 மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதால், இக்கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டுமென, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளையுடன் (ஜூலை 26) முடிவடைவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close