கார்கில் போரில் உயிர் நீத்தவர்களுக்கு தலைவணங்குவோம்: குடியரசுத்தலைவர்

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2019 09:23 am
president-remembers-kargilvijaydiwas

நாட்டை பாதுகாக்க கார்கில் போரில் இன்னுயிரை நீத்தவர்களுக்கு இந்நாளில் தலைவணங்குவோம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கார்கில் வெற்றி தினத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்து இந்திய பகுதியை கைப்பற்றியது. இந்தப் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் தினமாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. போரில் உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படுகிறது. 

கார்கில் வெற்றி தினத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நினைவு கூர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "1999ம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற கார்கில் போரில் நாட்டை பாதுகாக்க தன்னுயிரை நீத்தவர்களுக்கு இந்நாளில் தலைவணங்குவோம். அவர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை இந்நாடு என்றும் நினைவு கூறும். அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும் தலை வணங்குவோம்" என்று பதிவிட்டுள்ளார்.  

— President of India (@rashtrapatibhvn) July 26, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close