கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2019 09:44 am
defence-minister-rajnathsingh-pay-homage-to-kargil-martyrs-at-national-war-memorial-delhi

கார்கில் போர் நினைவு தினத்தையொட்டி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

1999 ஆம் ஆண்டு காஷ்மீர் எல்லையில் கார்கில் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இந்தப் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போரில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்நாளில் வீர வணக்கம் செலுத்தப்படுகிறது.  

அந்த வகையில் கார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார். அவருடன் ராணுவத்தளபதி பிபின் ராவத், விமானப்படை மார்ஷல் பிரேந்தர் சிங், கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் என முப்படைத்தளபதிகளும் மரியாதை செலுத்தினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close