ரயில் பயணக் கட்டணம் உயர்வா? பயப்படாதீங்க... அமைச்சர் சொல்றத கேளுங்க...

  கிரிதரன்   | Last Modified : 26 Jul, 2019 07:40 pm
worried-about-indian-railways-fares-being-hiked-worry-not-here-is-railway-minister-assurance

நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட  மத்திய பட்ஜெட்டின்போது, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ஒரு ரூபாய் உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையில் உள்ள ஏற்ற, இறக்கம் காரணமாக ரயில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதா? என, நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி., ஹரிபிரசாத் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், " ரயில் பயணக் கட்டணங்களை தற்போது உயர்த்துவதற்கான திட்டமில்லை. அத்துடன், ரயில் போக்குவரத்தில் டீசலின் பயன்பாடு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. வரும் 2022- ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து ரயில் வழித்தடங்களும் மின்மயமாக்கப்படும். கூடவே, பயோ -டீசல் பயன்பாடும் அதிகரிக்கப்படும்" என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

2018-19 நிதியாண்டில், இந்திய ரயில்வே மொத்தம் 2,044 கோடி யூனிட் மின்சாரத்தையும், 310 கோடி லிட்டர் டீசலையும் பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close