காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2019 11:56 am
2-terrorists-killed-in-encounter-in-jammu-and-kashmir-s-shopian

காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் வந்ததையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஓருவன் பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்டு செயபட்டு வரும் ஜெய்ஷ் ஏ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஓருவன் என்று தெரிய வந்துள்ளதாக பாதுகாப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close