தண்ணீர் கொள்கையை உருவாக்கிய மேகாலயா அரசிற்கு நன்றி: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2019 12:59 pm
pm-modi-s-mann-ki-baat-highlights

நாட்டில் முதல்முறையாக, தனக்கென தண்ணீர் கொள்கையை உருவாக்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை மேகாலயா பெற்றுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நான் கடந்த மாத நிகழ்ச்சியில் கூறியதை கருத்தில்கொண்டு பலர் பல்வேறு புத்தகங்களை படித்து தங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர். உங்களது கருத்துக்கள் மூலமாக நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். 

தண்ணீர் சேமிப்புக்கான பாரம்பரிய முறைகள் குறித்த ஆலோசனைகள் எனக்கு பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களிடம் இருந்து வந்துகொண்டிருக்கிறது. மத்திய அரசுடன் இணைந்து அந்தந்த மாநில அரசுகளும் தொண்டு நிறுவனங்களும் தண்ணீர் சேமிப்புக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் முதல்முறையாக, தனக்கென தண்ணீர் கொள்கையை உருவாக்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை மேகாலயா மாநிலம் பெற்றுள்ளது. இதற்காக மேகாலயா அரசுக்கு எனது பாராட்டுகள்.

ஹரியானாவில், குறைந்த நீரை பயன்படுத்தப்படும்படியான பயிர்களை நடவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு இழப்பு என்பது குறைகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் விழாக்களின் போது, தண்ணீர் சேமிப்பு குறித்த தெரு நாடகங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். 

மாஸ்கோவில் நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டியில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 10 குழந்தைகள் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர்" 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close