24 மணி நேரம்... 45 செ.மீ., மழை... ஊர் தாங்குமா?!

  கிரிதரன்   | Last Modified : 28 Jul, 2019 04:53 pm
mumbai-matheran-becomes-the-wettest-place-in-the-country-after-receiving-record-breaking-rainfall

கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. அதுவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வெளுத்து வாங்கி வரும் மழையால், அங்கு பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக,  ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பைக்கு அருகே உள்ள மலைப் பகுதியான மதிரானில் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் சனிக்கிழமை மதியம் 1 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 450 மில்லிமீட்டர் மழை... அதாவது 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

இதையடுத்து, நாட்டிலேயே தற்போதைக்கு அதிக மழை பெய்துள்ள இடம் மதிரான் தான் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 42 இடங்களில் குறைந்தபட்சம் 100மி.மீ., முதல் அதிகபட்சம் 400 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close