கல்விக்கொள்கை: கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!

  அனிதா   | Last Modified : 29 Jul, 2019 02:47 pm
education-policy-time-for-comment-further-extended

புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஹிந்தி கட்டாயம் என்ற பரிந்துரைக்கு தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் திருத்தப்பட்ட கல்விக்கொள்கை  வரைவுத்திட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக  இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 

மேலும், இது குறித்து ஜூலை 31 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு பற்றி கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close