வகுப்பறைக்குள் நுழைந்த மாடு... மிரண்டு போன மாணவர்கள்!

  கிரிதரன்   | Last Modified : 29 Jul, 2019 05:12 pm
bovine-enters-iit-bombay-classroom-institute-plans-cow-shelter-on-campus

சில பள்ளி, கல்லூரி வகுப்பறைகளுக்குள் குரங்குகள் புகுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான மும்பை ஐஐடியின் வகுப்பறையில் சற்று வித்தியாசமாக, மாடு ஒன்று ஹாயாக நுழைந்து, மாணவர்களை மிரட்டிய சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 'ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்கும் பாடத்தை மாணவர்கள் ஆர்வமுடன்  கவனித்துக் கொண்டிருக்க, திடீரென ஒரு மாடு வகுப்பறைக்குள் நுழைகிறது. உடனே ஆசிரியர், தன் கையில் வைத்திருக்கும் பிரம்மால் மெல்லமாக மாட்டை அடித்து விரட்டுகிறார். அப்போதும் அந்த மாடு வெளியேறாமல், ஒவ்வொரு பெஞ்ச்சாக மாணவர்களின் அருகே செல்கிறது. இதனால் மிரண்டு போகும் மாணவர்கள், தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து பின்நோக்கி செல்கின்றனர்.

முன்னதாக, கடந்த ஜூலை 11 -ஆம் தேதி, மும்பை ஐஐடி வளாகத்தில் சுற்றித் திரிந்த இரண்டு மாடுகள் முட்டியதில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=jJFu1CfCv_A

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close