இந்த மாநிலக்காரர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!

  கிரிதரன்   | Last Modified : 29 Jul, 2019 07:57 pm
odisha-s-rasagola-gets-geographical-indication-gi-tag

காஞ்சிபுரம் பட்டு,  திருப்பதி லட்டு என அந்தந்த நகரம், பகுதியில் பிரபலமாக உள்ள பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த வரிசையில் ஒடிசா மாநிலத்தல் பிரபலமான இனிப்பு வகையான ரசகுல்லாவுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இதையடுத்து இந்த இனிப்பு வகை இனி, 'ஒடிசா ரசகுல்லா' என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தா தான் ரசகுல்லாவுக்கு பெயர் பெற்ற ஊராக கருதப்படும் நிலையில், ஒடிசா ரசகுல்லாவுக்கு தற்போது புவிசார் குறியீடு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004 -05 ஆண்டில் முதன்முதலாக, டார்ஜிலிங் டீக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இன்றுவரை, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 321 வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close