பீடி இலைகளை கடந்த முயன்றதாக 6 பேர் கைது: இலங்கை கடற்படையினர் விசாரணை

  அனிதா   | Last Modified : 30 Jul, 2019 09:20 am
sri-lankan-navy-arrests-six-persons-for-smuggling-beedi-leaves

இந்தியாவில் இருந்து பீடி இலைகளை கடந்த முயன்றதாக 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

இந்தியாவில் இருந்து நாட்டுப்படகில் சென்ற 6 பேர், மீனவர்கள் போன்று இலங்கை செல்ல முயன்றுள்ளனர். அப்போது இலங்கை கடற்படையினர் அவர்கள் படகுகளை சோதனையிட்டபோது, அதில் 2,379 கிலோ பீடி இலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து மீனவர்கள் போன்று வேடமிட்டு பீடி இலைகளை கடந்த முயன்ற 6 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பீடி இலைகள் மற்றும் நாட்டு படகுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களை இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close