பாலின சமத்துவ பயணத்தில் ஓர் மைக்கல் : குடியரசுத் தலைவர் புகழாரம்

  கிரிதரன்   | Last Modified : 30 Jul, 2019 10:09 pm
triple-talaq-a-milestone-in-the-quest-for-gender-justice-president-kovind

முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையிலும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம், தலாக் முறையால் முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிக்கு தீர்வு கிடைத்துள்ளது. பாலின சமத்துவத்தை நோக்கிய நீண்டதொரு பயணத்தில் இதுவொரு மைக்கல். ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது" என தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close