முத்தலாக் தடை மசோதா : பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள முஸ்லிம் பெண்!

  கிரிதரன்   | Last Modified : 31 Jul, 2019 10:02 pm
shayara-bano-petitioner-in-instant-talaq-case-thanks-to-minister-rs-prasad-pm-modi-for-triple-talaq

முத்தலாக் தடை மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,  முஸ்லிம் பெண்ணான சயிரா பானு, நாடாளுமன்றத்தில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "முத்தலாக் தடை மசோதா முஸ்லிம் சமுதாயத்துக்கும், அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் நல்ல விஷயமாகும். இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதன்  மூலம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமே மகிழ்ச்சியடைந்துள்ளது. இந்த மசோதாவை எதிர்ப்பவர்களும், இம்மசோதா நிறைவேற தடையாக இருந்தவர்களும், இதனை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்" என சயிரா பானு கூறியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், அவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே தங்கள் மனைவியை  மூன்றுமுறை தலாக் சொல்லி விவகாரத்து சொல்லும் நடைமுறையை எதிர்த்து, சயிரா பானு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2016 -இல் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close