காஷ்மீர் ராணுவ படையில் எம்.எஸ். தோனி..!

  அனிதா   | Last Modified : 01 Aug, 2019 09:23 am
m-s-dhoni-in-kashmir-army

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரரான தோனி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய துணை ராணுவப்படையின் பாராசூட் பிரிவில் லெப்டினென்ட் கர்னலாக  உள்ளார்  உலக கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரிக்கெட்டில் இருந்து 2 மாதம் விலகி ராணுவ சேவையில் ஈடுபடபோவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் இணைந்த தோனி,  அங்கு ரோந்து பணி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை காஷ்மீரில் ராணுவப்பணியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close