குஜராத் கனமழை: வதோதரா விமானநிலையம் மூடல்!

  அனிதா   | Last Modified : 01 Aug, 2019 10:33 am
vadodara-airport-closing-till-3-pm-today

குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வதோதரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு  கனமழை பெய்தது. நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் 3 அடி அளவுக்கு வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வதோதரா விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது. விமான ஓடு பாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணி வரை விமானங்கள் இயக்கப்படாது என விமான நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடு பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close