ராணுவப்பணியில் கிரிக்கெட் மட்டையில் கையெழுத்திடும் எம்.எஸ்.தோனி; வைரல் போட்டோ..

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 10:42 am
ms-dhoni-s-photo-vairal

காஷ்மீரில் ராணுவப்பணியில் இருக்கும் எம்.எஸ்.தோனி கிரிக்கெட் மட்டையில் கையெழுத்திடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் 'கூல் கேப்டன்' என்று செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் உலக வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். ராணுவத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, அவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டிருந்தது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிற்கு பின்னர் அவர் ஓய்வு பெறுவதாக தகவல் வெளியான நிலையில் இரு மாதங்களுக்கு மட்டும் ராணுவத்தில் பயிற்சி பெற அவர் செல்வதாக கூறப்பட்டது. 

அதன்படி, தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்களுடன் இணைந்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவக்குழுவுடன் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளார். 

இந்நிலையில், காஷ்மீரில் ராணுவப்பணியில் இருக்கும் எம்.எஸ்.தோனி, சக ராணுவ வீரர் ஒருவருக்கு கிரிக்கெட் மட்டையில் 'ஆட்டோகிராப்' போடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close