ஜம்மு காஷ்மீரில் மேலும் 28 ஆயிரம் வீரர்கள் குவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 02:51 pm
another-28-000-troops-rushed-to-kashmir-valley-week-after-10-000-were-deployed

ஜம்மு காஷ்மீரில் மேலும் 28 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. காஷ்மீரில் சமீபத்தில் 10 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று மேலும் கூடுதலாக 28 ஆயிரம் வீரர்களை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த ஆண்டு இறுதிக்குள் காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதாகவும், அதனால் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்காக காஷ்மீரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close