அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக சொந்த ஊருக்குத் திரும்ப உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 04:47 pm
amarnath-yatra-pilgrims-and-tourists-asked-to-leave-kashmir-immediately-ministry

தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் உடனடியாக காஷ்மீரிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் மற்றும் வெளியூர் மக்கள் உடனடியாக காஷ்மீரிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அமர்நாத் யாத்ரீகர்கள் யாரும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்க வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close