அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2019 08:36 pm
lok-sabha-passes-the-dam-safety-bill

அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. அனைத்து மாநிலங்களில் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க இந்த மசோதா வழிவகை செய்யும்.

முன்னதாக, அணை பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தின் போது மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், ‘அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் விதிமுறைகள் உள்ளன. தமிழகம், கேரளா இடையே அணை குறித்த சிக்கல் உள்ளதுபோல் மேற்குவங்கம் - ஜார்க்கண்ட் இடையேயும் சிக்கல் உள்ளது’ என்றார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close