காஷ்மீரில் என்கவுண்டர்: இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2019 03:48 pm
kashmir-shopian-encounter-two-terrorist-killed

காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் தீவிரவாதிகள் உள்நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் வந்ததையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட, தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 

இதில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதால் அப்பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. 

newstm.in

உருவாகிறது புதிய மாநிலம்; உடைகிறது ஜம்மு - காஷ்மீர்?

பரபரப்பான சூழ்நிலையில், காஷ்மீர் ஆளுநரை சந்தித்தார் ஒமர் அப்துல்லா!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close