எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி? ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2019 03:48 pm
ibrahim-azhar-jem-chief-masood-azhar-s-brother-resurfacing-in-pok-and-confirmed-that-group-of-15-trained-jem-cadres-had-reached-jem-camps

ஜம்மு காஷ்மீரில் நிலவும் பல்வேறு பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே, ஜெய்ஷ்-இ- முகம்மது தீவிரவாதிகள் 15 பேர் காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த வாரம் துணை ராணுவப்படையினர் 10,000 பேர்  காஷ்மீரில் குவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மேலும் 28,000 வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

இந்த சூழ்நிலையில், ஜெய்ஷ்-இ- முகம்மது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் இப்ராஹிம் அசார் மற்றும் பயிற்சி பெற்ற 15 தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஜம்மு காஷ்மீரில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. 

newstm.in

உருவாகிறது புதிய மாநிலம்; உடைகிறது ஜம்மு - காஷ்மீர்?

பரபரப்பான சூழ்நிலையில், காஷ்மீர் ஆளுநரை சந்தித்தார் ஒமர் அப்துல்லா!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close