18 இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்!

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2019 05:50 pm
external-affairs-minister-jaishankar-replied-to-cm-edappadi-palanisamy

ஈரானில் சிக்கியுள்ள 18 இந்தியர்களையும் தாயகம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பதில் அளித்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சவுதி அரேபியாவிற்கு சென்ற எம்பரோ என்ற கப்பலில் பணியாற்றி வந்த 18 இந்தியர்கள் கடந்த ஜூலை 19ம் தேதி சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்ட 18 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த ஆதித்யா வாசுதேவன் என்பவரும் அடங்குவர். ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில் அமைச்சர் ஜெய்ஷங்கர் முதலமைச்சருக்கு பதில் அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களையும் விரைவில் விடுவித்து தாயகம் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகின்றோம். இது தொடர்பாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றோம். தெஹ்ரானில் உள்ள நமது தூதரக அதிகாரிகள் மாலுமிகளைச் சந்தித்துள்ளனர். அவர்கள் நலமாக இருப்பதாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close