மும்பைக்கு கனமழை எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2019 11:08 pm
heavy-rainfall-waring-to-mumbai

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரங்களில் அங்கு மிக கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மும்பை - கோவா இடையிலான நெடுஞ்சாலையில், மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close