பாகிஸ்தானியர்களின் உடலை பெற்றுக்கொள்க: சலுகை வழங்கும் இந்திய ராணுவம்!

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2019 10:07 am
indian-army-have-offered-pakistan-army-to-take-over-the-dead-bodies

காஷ்மீரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடலை வந்து பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டிற்கு இந்திய ராணுவம் சலுகை வழங்கியுள்ளது.

காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்புப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் சோபியான் மாவட்டங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இந்திய ராணுவம் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 7 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சூழ்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தானியர்களின் உடலை வெள்ளைக் கொடியுடன் வந்து பெற்றுக் கொள்ளுமாறு இந்திய ராணுவம் அந்நாட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close