காஷ்மீர் விவகாரம்: அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

  Newstm Desk   | Last Modified : 05 Aug, 2019 10:53 am
kashmir-issue-pm-s-consultation-with-ministers

டெல்லியில் மத்திய அமைச்சரவைக்கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கியது. 

ஜம்மு- காஷ்மீரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தின் முடிவில் காஷ்மீர் விவகாரம் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

முன்னதாக, காஷ்மீர் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் முடிந்து அமைச்சரவை கூட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close