காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் : வைகோ எதிர்ப்பு

  அனிதா   | Last Modified : 06 Aug, 2019 10:40 am
cancellation-of-kashmir-special-status

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதற்கு தமிழக எம்பிக்களான வைகோ, மற்றும் திருச்சி சிவா ஆகியோர் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். 

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்வதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, மதிமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். 

மேலும், தமிழக எம்.பிக்களான திருச்சி சிவா மற்றும் வைகோ ஆகியோர், நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அதன் தனித்துவத்தை இழந்துவிட்டதாகவும், கொசாவா, தெற்கு சூடான் போல் ஜம்மு-காஷ்மீர் மாறி விடக்கூடாது என்றும் வைகோ பேசினார். மேலும் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரசும் பொறுப்பு என சுட்டிக்காட்டினார். 

இதனிடையே, சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close