ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2019 11:32 am
j-k-reorganisation-bill-tables-in-loksabha

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து (விதி 370 & 35A ) திரும்பப்பெறப்படுவதாக நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதற்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்து அறிமுக உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து, மசோதா மீதான விவாதம் தொடர்பாக காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவர் ஆதி ரஞ்சன் சௌத்ரி பேசி வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close